• Jul 26 2025

நடிகை இலியானாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதா?- நீண்ட நாளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை இலியானா, கடந்த 2006-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் டோலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து 2012-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார் 

ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றாலும், இலியானாவுக்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக பிக் புல் என்கிற பாலிவுட் படம் வந்தது. தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.


மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் இலியானா தனக்கு ஆகஸ்ட் 1ம் தேதி ஆண் குழந்தை பிறந்திருப்பதாக பகைப்படத்துடன் அறிவித்திருந்தார்.குழந்தைக்கு கோ ஃபீனிக்ஸ் டோலன் என பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இலியானாவுக்கு கடந்த மே மாதம் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


இலியானாவுக்கும், அவரின் காதலரான மைக்கேல் டோலனுக்கும் கடந்த மே மாதம் 13ம் தேதி திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது தான் கர்ப்பமாக இருப்பதாக இலியானா அறிவிப்பு வெளியிடுவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு அவருக்கு திருமணமாகிவிட்டதாம். அவருக்கும், மைக்கேலுக்கும் எங்கு திருமணம் நடந்தது என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement