• Jul 25 2025

நடிகை பூர்ணாவின் திருமணம் நின்றுவிட்டதா..? அவரே கொடுத்த விளக்கம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.

அதன்பிறகு கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.

இவர் தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தவர், தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் நிச்சயதார்ர்த்தம் நடந்தது.கடந்த சில நாட்களாக பூர்ணாவின் திருமணம் ரத்து என சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. அவற்றை மறுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எப்போதும் என்னவர்,” எனப் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பூர்ணா.

அத்தோடு பூர்ணாவின் அடுத்த தமிழ்ப் படமாக மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள 'பிசாசு 2' படம் வெளிவர உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement