• Jul 25 2025

நடிகை ஷாலு ஷம்முவிற்கு திருமணமா...அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது.

மேலும் இதனைத் தொடர்ந்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. மேலும் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார்.

ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் குத்து, இப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்த ஷாலு ஷம்மு, தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த படத்துக்கு பிறகு திரையுலகில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் அழகான புடவையில் மாலை இடுவது போல புகைப்படத்தை இட்டு 'Am in a shoot or am I getting engaged ? ♥️' என கேட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் என எண்ணி கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.ஆனால ஒரு சிலரோ இது சூட் என எண்ணி பதிவுகளை போட்டு வருகின்றார்.இவ்வாறுஇருக்கையில் அவரே இதற்கான விடையை கூறினால் தான் ரசிகர்களுக்கு தெரியவரும்.




Advertisement

Advertisement