• Jul 23 2025

லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதற்கு அனிரூத் தான் காரணமா?- உண்மையை உடைத்த பிரபலங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படம் அடுத்த மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் 30ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால்  திடீரென இந்த நிகழ்ச்சியானது கேன்சல் ஆகிவிட்டது.ரசிகர்கள் அதிகளவில் கூடினால் பாதுகாப்பு ஏற்பாட்டில் குழப்பம் வந்துவிடும் என இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டதாக படக்குழு தெரிவித்தது. 

இதனால் விஜய் ரசிகர்கள் கடும் சோகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளன. அதாவது, லியோ இசை வெளியீட்டு விழா ரத்தாக அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என்றே, வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோர் கூறியுள்ளனர். 


மேலும், 6000 பேர் மட்டுமே பங்கேற்கக் கூடிய அளவிலான நேரு ஸ்டேடியத்தில், அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் கூடினால் பாதுகாப்பு இருக்காது என்றே ரத்து செய்யப்பட்டுள்ளதாம். லியோ இசை வெளியீட்டு விழாவில் 60,000 ரசிகர்கள் வரை கலந்துகொள்ளலாம் என தெரியவந்ததால் தான் விஜய் ரிஸ்க் வேண்டாம் என கேன்சல் செய்துவிட்டாராம்.

உளவுத்துறையின் அறிக்கை படியே 50,000 ரசிகர்கள் கலந்துகொள்ளலாம் என ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அதேபோல், இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாமல் இருந்தால், அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என விஜய் நினைத்துள்ளார். ஒருவேளை பேசவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், லியோ ரிலீஸுக்கு சிக்கல் எழலாம் என்பதும் விஜய்யின் சந்தேகமாம். 


அதனால் தான் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளாராம். இன்னொரு பக்கம் லியோ இசை வெளியீட்டு விழாவில், லைவ் பெர்பாமன்ஸ் செய்ய முடியாது என அனிருத்தும் மறுப்புத் தெரிவித்து விட்டாராம். அனிருத்தின் இசை நிகழ்ச்சி இல்லையென்றால் அதுவும் ரசிகர்களுக்கு போரடித்து விடும் என்பதால் தான் அவசரமாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement