• Jul 24 2025

பிக்பாஸ் அமுதவாணன் ஒரு நாளைக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளம் பெறுகின்றாரா?- பரபரப்பாகும் டிஸ்கஷன்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாரவாரம் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் அமுதவாணன். இவர் விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பிரபல்யமானவர் அண்மையில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் கடைசி சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டுள்ளார்.இதில் பேசும் மணிகண்டாவும், அசீமும், “எப்படியும் அமுதவாணன் ஒரு நாளைக்கு 1 ரூவா (1 லட்சம் ரூபாய் என்பதை குறிப்பிடுவதாக இருக்கலாம்)சம்பளம் வாங்குவாப்ல. இப்ப 70 நாள் ஆயிடுச்சு.. டாஸ்க்க தவிர,  லம்ப்பா இவ்ளோ அமௌண்ட் வந்துடும்.” என்றும்  குறிப்பாக, “டைட்டில் வின்னரா ஒருத்தர் அடிக்குற காசுக்கு மேலேயே அவருக்கு காசு வந்துடும்” என கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். 


இதையெல்லாம் கேட்ட அமுதவாணன், பிக்பாஸ் கேமராவை பார்த்து “இதெல்லாம் பொய் .. நம்பாதீங்க” என ‘ஆதவன்’ படத்தில் வடிவேலு அழாத குறையாக சொல்வது போலவே ரியாக்‌ஷன் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















 


Advertisement

Advertisement