• Jul 24 2025

பிக்பாஸ் 6வது சீசனில் நுழையப்போகின்றாரா..சீக்கிரட்டை உடைத்த ரவீந்தர் மனைவி மகாலக்ஷ்மி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சின்னத்திரையில்  ரசிகர்களின் மனதைத் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழில் இதுவரை 5சீசன்கள் நிறைவடைந்துள்ளது.

அதன்படி ஆரவ், ரித்திகா, முகின், ஆரி, ராஜு ஆகியோரே 5 சீசன்களின் வெற்றியாளர்களாக தேர்வாகியிருக்கின்றனர்.இதனை அடுத்த பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றியாளராக தேர்வாகினார்.

இதனை அடுத்து 6வது சீசன் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.இது குறித்த புரோமோ ஒன்றும் அண்மையில் வெளியாகியிருந்தது. அத்தோடு  அண்மையில் 6வது சீசனிற்கான லோகோ வெளியாகி இருந்தது



நிகழ்ச்சி ஆரம்பமாக போகிறது என்றதில் இருந்து நிறைய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. அப்படி அண்மையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை மகாலக்ஷ்மி பிக்பாஸ் 6வது சீசனில் வர இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் ஒரு நேர்காணலில் மகாலக்ஷ்மி  நானும் போகமாட்டேன் இவரையும் போகவிடமாட்டேன் என உறுதியாக கூறி இருந்தார்.இதில் எந்த மாற்றமும் ஏற்படுமா என தெரியவில்லை.பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement