• Jul 25 2025

பாலிவுட் நாயகி ப்ரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு இத்தனை மில்லியனா?- சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களில் மாஸ் காட்டிய பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார். பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு வாடகைத்தாய் முறை மூலம் பெண் குழந்தைக்கு தாயானார். குழந்தை பிறந்த பிறகும் படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.


நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது, ஸ்டான்லி டூசி, லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் இணைந்து சீட்டடெல் வெப் தொடரில் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரின் முதல் சீசன், ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த வெப் தொடர், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.


ஹாலிவுட்டில் மாஸ் காட்டி வரும் பிரியங்கா சோப்ரா தனது 41வதுபிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 70 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது, இதன் இந்திய மதிப்பு மட்டும் ரூ.559 கோடி ஆகும்.

ஒரு படத்திற்கு ரூ.14 கோடி சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ரா, இந்தியாவின் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அத்தோடு இன்ஸ்டாகிராமில் இவருக்கு 79.2 மில்லியன் பாலோவர்ஸ்கள் உள்ளனர், தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றிற்கு இவர் ரூ.3 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. இதுதவிர இவர் சில நிறுவனங்களின் அம்பாசிடராகவும் இருக்கும் இவர், ஒரு விளம்பரத்துக்கு இவர் ரூ. 4 முதல் ரூ.10 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement