• Jul 26 2025

சாக்லெட் பாஃய் நடிகர் பிரசாந்தின் முழுச் சொத்தும் இத்தனை கோடியா?- நகை கடையும் இருக்கா?

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் தான் பிரசாந்த்.சாக்லெட் பாஃய் என்று அழைக்கப்பட்ட இவர் நல்ல நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து திடீரென அதிகரித்த உடல் எடை காரணமாக சில காலம் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அத்தோடு இவருக்கு படவாய்ப்புக்களும் குறைய ஆரம்பித்தது. இதனால் தெலுங்கில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் அந்தகன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை சிம்ரன் ,வனிதா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் மாபெறும் வெற்றிக்கண்ட அவரது திருமண வாழ்க்கை சுமூகமாகவே இல்லை, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

சினிமாவில் சாதித்த நடிகர் பிரசாந்த் சொந்தமாக ஒரு நகை கடையும் வைத்துள்ளார். இப்படி தொழிலையும் ஒரு பக்கம் கவனித்து வரும் இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 85 கோடி இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement