• Jul 25 2025

எதிர் நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகின்றதா?- இயக்குநர் கொடுத்த அப்டேட்- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் கோலங்கள் என்ற சீரியலை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் இயக்குநர் திருச்செல்வம். இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார்.

ஆரம்பம் முதல் தற்போது வரை இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நாளுக்கு நாள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ப்ரோமோ வெளியான அடுத்த நொடியே பல்லாயிரக்கணக்கான லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.


இந்த நிலையில் இயக்குனர் திருச்செல்வம் அளித்த பேட்டி ஒன்றில் இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என கேட்கப்பட்டுள்ளது. தற்போது வரை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களோடு ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் மத்தியில் எப்போது ஆர்வம் குறைகிறதோ அப்போது இந்த சீரியல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் கோலங்கள் சீரியலில் எனக்கு 400 வது எபிசோடில் இருந்து தான் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement