• Jul 25 2025

பிக்பாஸ் 6 புகழ் அசீமின் உடன் பிறந்தவர் இவரா...வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.அத்தோடு  சுமார் 90 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இப்போது ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறப்போகும் பிரபலம் யார் என்பது தான்.


அத்தோடு வாக்குகளை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் ஷிவின் வீட்டைவிட்டு வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக இருக்கிறார் அசீம். அத்தோடு சண்டை, வாக்குவாதம், கோபம் என இதுபோன்ற எமோஷன்களை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்.

எனினும் தற்போது சமூக வலைதளங்களில் இவரது சகோதரரின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement