• Jul 24 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இவர் விலகப் போகின்றாரா?- வெளியாகிய ப்ரோமோவால் குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், முக்கிய கதாப்பாத்திரத்தில் அதாவது மூர்த்தியின் மனைவியாக தனம் என்ற கதாப்பாத்திரத்தில்  நடிகை சுஜிதா நடித்து வருகிறார். இவர் தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் தெலுங்கில், ஜெமினி டிவியில் புதிதாக தொடங்க உள்ள கீதாஞ்சலி என்ற சீரியலில் நடித்துள்ளார். இதற்கான ப்ரோமோ அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதைப் பார்த்த பலரும்.ஸ்ரீ இந்த புரோமோ-வை எங்கேயோ பார்த்திருப்பது போல் உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.


இந்தத் தொடர் தமிழில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி தொடரின் ரீமேக் ஆகும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் சீரியல் என்பதால், சுஜிதாவுக்கு இதில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதையடுத்து பிரபலங்கள் பலரும், நடிகை சுஜிதாவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.


ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதால் இப்படி வேறு சீரியலுக்கு தாவி விட்டாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சுஜிதா இந்த சீரியலில் நீடிப்பாரா? இல்லையா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement