• Jul 26 2025

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- யாரும் எதிர்பார்க்காத ருவிஸ்ட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி தற்போது 46வது நாளை எட்டியுள்ளது . இப்போட்டியாளர்களுள்  பலரையும் கவர்ந்த ஜிபி முத்து தனது விருப்பத்தின் பேரில் முதலிலேயே வெளியேறினார்.

எனினும்  இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்பட்டு தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளார்கள்.

இவ்வாறுஇருக்கையில் , பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடானது நீதி மன்றமாக செயற்பட்டு வருகின்றது.

இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற நாமினேட் ஆனவர்கள் அசீம், ராபர்ட், மணிகண்டன், கதிரவன், தனலட்சுமி, அமுதவாணன், ராம் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.


மேலும் இதில் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மணிகண்டன் மற்றும் ராபர்ட் தானாம். இவர்களில் மணிகண்டன் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.






Advertisement

Advertisement