• Jul 25 2025

ரசிகர்களின் வலிக்கு இது மருந்தாகுமா..? ஏ.ஆர்.ரகுமானை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சர்வதேச அளவில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் இவரின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடந்தது. இருப்பினும் இறுதியில் இதில் சலசலப்பு நடந்தது தான் மிச்சம். 


ஏனெனில் இந்த கச்சேரிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்ஸ் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இவர்கள் சுமார் 2 முதல் 3 லட்சம் டிக்கெட்ஸ்களினை விற்றிருந்தனர். அத்தோடு 35 ஆயிரம் பேர்களை மட்டுமே உள்ளே அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் டிக்கட் வாங்கிய ஏனையோர் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். இதன் காரணமாகவே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சன நெரிசலால் பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறித்த பணத்தை டிக்கட் வாங்கியவர்களுக்கு திரும்ப கொடுக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் "Chennai concert highlights" எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றினைப் பதிவிட்டு இருக்கின்றார். ஆனால் அதில் கமெண்ட் இடும் பகுதியை முடக்கியுள்ளார். இதனை அவதானித்த ப்ளூ சட்டை மாறன் ரகுமானை வெளுத்து வாங்கத் தொடங்கி விட்டார். 

அதாவது "சென்னை கச்சேரி 'மறக்குமா நெஞ்சம்?' நிகழ்ச்சியின்போது பாதிக்கப்பட்டவர்களின் குரலை/ கருத்துகளைக் கேட்க அவர் தயாராக இல்லை. இந்த பிரமாண்டமான நிகழ்வைப் பற்றிபலரும் உங்களிடம் வீடியோ கேட்கிறார்கள். ஆனால் நீங்கள் முழுமையான சைலன்ட் மோடில் இருக்கிறீர்கள்" என்றார்.


மேலும் "பணத்தைத் திரும்பப் பெறுவது மட்டுமே அவர்களின் வலியைக் குணப்படுத்தாது. அது உங்களுக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் நீங்கள் வெறுமனே உங்கள் முகத்தைக் காட்டுவதைப் புறக்கணிக்கிறீர்கள், மேலும் கருத்து தெரிவிக்கும் விருப்பத்தையும் முடக்குகிறீர்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். 


Advertisement

Advertisement