• Jul 25 2025

நடிகர் சரத்பாபு இறந்து விட்டார் என பரவிய தகவல் வதந்தியா?- இரங்கல் பதிவை உடனடியாக நீக்கிய குஷ்பூ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தின் மூலம், அறிமுகமானவர் சரத்பாபு. இவரின் அழகும், நேர்த்தியான நடிப்பும், இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இவர் நடித்த 'முத்து', 'அண்ணாமலை', போன்ற திரைப்படங்கள் இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த சரத்பாபு, கடந்த சில மாதங்களாகவே செப்சிஸ் என்கிற அரிய வகை பாதிப்பு காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 


சமீபத்தில் இவருடைய உடல்நலம் குறித்த தகவல் வெளியான போது, அவருடைய உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கி விட்டதாகவும், எனவே ஐசுயுவில் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சற்று முன்னர், சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வதந்தி பரவியது. இதை தொடர்ந்து குஷ்பூ, உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர் இறந்து விட்டதாக அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் போட்டதால், சமூக வலைத்தளங்களில் அந்த தகவல் நிஜம் என... செய்திகளும் வெளியாகின. 


ஆனால் தற்போது வரை அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே குஷ்பூ உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் பதிவை நீக்கி உள்ளனர்.சரத்பாபுவின் தங்கையும், சரத்பாபு தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டு வருவதாக உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement