• Jul 24 2025

ஹரிக்கு மட்டும் இவ்வளவு குறைவா.. சம்பள விஷயத்தில் பாரபட்ச்சம் பார்க்கிறாரா விஷால்..எழுந்த கடும் விமர்சனம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஷால் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தாமிரபரணி மற்றும் பூஜை படத்திற்கு பின் மீண்டும் இந்த கூட்டணி தற்போது அமைந்துள்ளது.

இப்படத்தை கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது. எனினும் சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டு, அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் கூட வெளிவந்தது

இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷால் ரூ. 14 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஆனால், பாண்டிராஜ் உருவாகும் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஷால் ரூ. 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.

முதலில் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என கூறிய நிலையில் மூன்று மாதங்கள் இதற்கான பேச்சு வார்த்தை நடந்துள்ளது.இதன் பின் இறுதியாக ரூ. 19 கோடி சம்பளமாக தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனினும் இதற்க்கு நடிகர் விஷாலும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்தோடு பாண்டியராஜ் இயக்கும் படத்திற்கு ரூ. 19 கோடி சம்பளம், ஆனால் ஹரி இயக்கும் படத்திற்கு மட்டும் ரூ. 14 கோடி சம்பளம் வாங்குகிறாரா விஷால் என கேள்வி எழுந்துள்ளது.

பாரபட்ச்சம் பார்த்து தான் விஷால் இப்படி செய்கிறாரா என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement