• Jul 24 2025

நண்பர்களின் மீது கடுங்கோபத்தில் விஷால்... பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் விஷால். திரையுலகில் ஒரு இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் அடியெடுத்து வைத்த விஷால் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஆனால் இவர் இயக்குநராக மாறுவதற்கு முன்பே நடிகராகும் வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் விஷால் 'செல்லமே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.


இதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பட்டத்து யானை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், கத்தி சண்டை, சக்ரா, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.


இந்நிலையில் விஷாலின் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் ரமணா மற்றும் நந்தா. இவர்கள் இருவரும் தமது நண்பனான விஷாலை வைத்து 'லத்தி' என்ற படத்தை தயாரித்திருந்தார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரமாண்டமாக வெளிவந்த இப்படம் படுதோல்வியையே சந்தித்துள்ளது.


இதனால் படக்குழுவினர் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் இப்படத்தின் தோல்வியால் விஷால், நந்தா மற்றும் ரமணா நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இதுவரை காலமும் இருந்து வந்த அவர்களது நெருங்கிய நட்புக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாம்.


அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகிய இருவரும் விஷாலுக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி இருந்த நிலையில் அந்த சம்பள பாக்கியும் இன்னமும் தரவில்லையாம். இதனால் இருவர் மீதும் விஷால் பயங்கர கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement