• Jul 25 2025

அசோக் செல்வன் தயாரிப்பாளரின் மகளை காதலிப்பது உண்மையா?- வாணி போஜன் கூறிய ரகசியத் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சூது கவ்வும் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் அசோக் செல்வன்.


கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். 2022-ம் ஆண்டில் மட்டும் இவர் ஹீரோவாக நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களை கொண்ட படமாகும். தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.


இப்படி பிசியான நடிகராக வலம் வரும் அவருக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பிரபல  தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருகிறாராம். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. எனவே அண்மையில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்த வாணிபோஜன் இது வதந்தியாகத் தான் இருக்கும்.

அசோக் செல்வன் ரொம்ப ஜாலியான ஒருவர் அவர் தான் கட்டிக்கிற பொண்ணையும் நல்லாப் பார்த்துக் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் ஓ  கடவுளே என்னும் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement