• Jul 23 2025

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் விஜய்சேதுபதியா?- சஸ்பென்ஷாக வைத்திருந்த படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் விஜேவாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்தாலும்  தன்னுடைய சிறப்பான திறமை மற்றும் திட்டமிடல் மூலம் தற்போது சிறப்பான உயரத்தை பிடித்துள்ளார். கோலிவுட்டில் விஜய், அஜித்திற்கு அடுத்தப்படியாக முன்னணி ஹீரோவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


அதற்கேற்ப படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கொச்சி, பெங்களூர் என அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டனர்.

இந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் ரசிகர்கள் அளவிற்கு மற்ற மாநில ரசிகர்களுக்கும் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தனர்.மேலும் இப்படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுக்க ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் அணுகியுள்ளனர்.ஆனால் அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.


இதையடுத்து தனுஷ் தான் மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாகவும்  கூறப்பட்டது.இந்நிலையில் மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.அத்தோடு சிவகார்த்திகேயனும் விஜய்சேதுபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement