• Jul 25 2025

மீண்டும் இயக்குநர் லிங்கசாமியுடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி- பையா 2 திரைப்படம் உருவாகின்றதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருப்பவர் தான் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருடைய கெரியரில் முக்கியமானதொன்றாக அமைந்துள்ளது.

இவரது நடிப்பில் தற்போது ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி வருகின்றார்.இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜப்பான் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம், 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2, பி.எஸ்.மித்ரனின் சர்தார் 2 என நடிகர் கார்த்தி கைவசம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.இது தவிர லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


கார்த்தி ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால், அது பையா படத்தின் 2-ம் பாகமாக இருக்குமா என்பது தான் ரசிகர்கள் மனதில் எழக்கூடிய கேள்வியாக இருக்கும். ஆனால் அவர்கள் இருவரும் இணைய உள்ள படம் பையா 2 இல்லை என்றும், அது புது கதைக்களத்தில் உருவாகும் படம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement