• Jul 25 2025

டி.ராஜேந்தர் தாடி வளர்ப்பதற்கு காதல் தோல்வி தான் காரணமா?- முக்கிய பிரபலம் சொன்ன சீக்ரெட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் டி.ராஜேந்தர். 80களில் இவர் இயக்கிய  ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, ரயில் பயணங்களில், உயிருள்ளவரை உஷா போன்ற பல்வேறு படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன.

டி.ராஜேந்தரின் மனைவியின் பெயர் உஷா ஆகும். மூத்த மகன் சிம்பு நடிகராக கலக்கி வருகின்றார். இரண்டாவது மகன் குரலரசன் இசையமைப்பாளராக சில படங்களில் பணியாற்றினார். அதன்பின் சினிமா செட் ஆகாததால் தற்போது சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். சிம்புவின் தங்கை இலக்கியாவும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.


இப்படி தமிழ் சினிமாவில் இன்று வரை ஆக்டிவாக இருந்து வரும் டி.ராஜேந்தர், எப்போதும் தாடி உடன் தான் காட்சியளிப்பார். அவரை தாடி இல்லாமல் பார்ப்பது அபூர்வம். அப்படி அந்த தாடியின் மீது அவருக்கு ஏன் அவ்வளவு பிரியம், அதை வளர்த்ததற்கான காரணம் என்ன என்பது புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில், டி.ராஜேந்தரின் நண்பரும், நடிகருமான தியாகு, டி.ஆரின் தாடிக்கு பின்னணியில் ஒரு லேடி இருப்பதாக கூறி இருக்கிறார்.


பேட்டி ஒன்றில் இதுகுறித்து அவர் கூறுகையில், டி.ஆர். தாடி வளர்க்க காதல் தோல்வி தான் காரணம் என கூறி இருக்கிறார். அவர் உஷா என்கிற பெண்ணை காதலித்தார். இருவரும் ஒரே தெரு தான். இவர்களது காதலுக்கு வீட்ல சம்மதிக்கல. அதனால் பிரிந்துவிட்டார்கள். அந்த காதல் தோல்வியால் தான் அவர் இன்று வரை தாடி வைத்துக் கொண்டிருக்கிறார் என தியாகு கூறி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் டி.ஆரின் தாடிக்கு பின்னணியில் இப்படி ஒரு சோகக்கதை இருக்கா என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement