• Jul 24 2025

லவ் டுடே ஹீரோயின் இவானா இரட்டை சகோதரர்களா..வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் சிறு பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வரவேற்பு அளிப்பதில்லை, பெரிய பட்ஜெட் படங்களையே விரும்பி பார்க்கிறார்கள் என்கிற பேச்சு கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த படம் தான் லவ் டுடே.

இப்படத்தில் ஹீரொயினாக நடித்தவர் தான் நடிகை இவானா.இப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

இவர் இதற்கு முன் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்து இருந்தார்.எனினும் தற்போது லவ் டுடே தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பெரிய ஹிட் ஆகி இருக்கும் சூழ்நிலையில் இவனாவும் தற்போது பாப்புலர் ஹீரோயின் ஆகி உள்ளார்.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில் என்பதால் அங்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததாம். இதனால் 2012ம் ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.


பின்னர் மூன்று வருடங்கள் கழித்து மோகன்லால் நடிப்பில் வெளியான ராணி பத்மினி படத்தில் நடித்திருந்தாராம். இவருடைய இயற்பெயர் அலைனா. இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் படத்தில் நடிக்கும் போது தான் இவருடைய பெயர் இவானா என்று மாற்றப்பட்டதாம்.

இவ்வாறுஇருக்கையில் இவனா ட்வின் சகோதரர் தானாம்.இந்நிலையில் அவரின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்...



Advertisement

Advertisement