• Jul 25 2025

பிக்பாஸ் போட்டியாளர் ஏடிகேயின் முறைப் பொண்ணு தான் மைனா நந்தினியா?- இதுவரை யாரும் அறிந்திடாத விஷயமாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தற்போது டிஆர்பிஎல் அதிக  ரேங்கிங் பெற்று வருவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6  தான். 21 போட்டியாளர்களுடன்ஆரம்பித்த இந்த சீசனில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். முதல் வாரத்தில் சாந்தியும் ஜி.பி முத்துவும் இரண்டாவது வாரத்தில் அசலும்  வெளியேறினார்கள்.

 தற்போது இந்த வாரத்துக்காக எலிமினேஷனுக்காக விக்ரமன், ஆயிஷா, அசின், ஷெரினா, கதிரவன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் விக்ரமன் முதல் இடத்திலேயும் அசீம், ஆயிஷா, கதிரவன் அடுத்தடுத்த இடங்களை பிடித்ததால் ஷெரீனா தான் இந்த முறை வெளியேறுவார்கள் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சீசனில் ஒரு வாரம் கழித்து என்ட்ரியான சின்னத்திரை பிரபலம் தான் மைனா நந்தினி.இவர் விஜய் டிவியில் பல நிகழ்சிகள் மற்றும் சீரியல்களில் பங்குபற்றி வருகின்றார். இது தவிர அண்மையில் வெளியாகியிருந்த விக்ரம் மற்றும் விருமன் ஆகிய படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மைனா நந்தினியின் மாமாவினுடைய மகன் தானாம் ஏடிகே.பிரபல ராஃப் பாடகரான இவர் பிக்பாஸ் சீசன் 6 இல் பங்குபற்றி வருகின்றார்.இவர்கள் இருவரும் உறவினராக இருந்தாலும் தமது கேஃமில் காட்டிக் கொடுக்காம விளையாடி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement