• Jul 25 2025

மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் தமிழ் படமா? மலையாளப் படமா?- படக்குழு கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இந்திய சினிமாவில் இளம் இயக்குநர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.இவர் இயக்கத்தில்  வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

இவர்  தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா பாண்டியன், பூ ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.


நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டவர். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

கேரள அரசின் திரைப்பட விழாவில் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த படம் நாளை ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நண்பகல் நேரத்து மயக்கம் படக்குழு கொடுத்துள்ளனர். இதில் பேசிய மம்மூட்டி, "இந்த படம் தமிழ்நாட்டில் பழனியில் நடக்கும் கதை. இந்த படம் முக்கால் வாசி தமிழ் வசனங்கள் தான். நிறைய தமிழ் நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழ் படமாகவே பார்க்கலாம்." என மம்மூட்டி கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement