• Jul 25 2025

அஜித் படத்தை இயக்குகிறாரா மோகன் ஜி? 3 வருடங்களுக்கு முன்பே ஸ்கிரீப்ட் ரெடியாம்..ஷாக்கான ரசிகர்கள்.

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களை இயக்கியவர் இயக்குநர் மோகன் ஜி. இவரின் 3வது படமான செல்வராகவன் மற்றும் நட்டி (எ) நடராஜன் நடித்த பகாசூரன திரைப்படம் கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் வெளியானது.

இந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது.ஒவ்வொரு சேனல்களிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு இவர் தெளிவான விளக்கம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் அஜித் சாரோட எப்போ படம் பண்ண போறீங்க? என்று கேள்வி கேட்ட போது,

அவர் கூறுகையில் ''செல்வராகவன் சாருக்கே படம்பண்ணினத்துக்காக  தலை கீழா உருளுறாங்க,இவர் எப்படி இதில நடிச்சார் எண்டு.அஜித் சாருக்கு படம் பண்றது இப்போ இல்ல,அதுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.அஜித் சார் இப்படியான கதையம்ச ஹாரக்டர டச் பண்ணிக்கிற ஆள் கிடையாது.  அதை நோக்கி ட்ராவல் பண்ண ட்ரை பண்ணுறன். ருத்ர தாண்டவம்,திரௌபதி கதையம்சங்களை உடைத்துக்கொண்டு அங்க போய் நிக்கேலாது ,அது ரொம்ப கஷ்டம் ,ஆகவே நான் அத எதிர்பாக்கல.

இருந்தாலும் ஒரு மாஜிக் நடக்காத என்ற ஆசை அனைத்து இயக்குநர்களுக்கும் இருக்கும்ல. 2,3 வருடங்களுக்கு முதல் ஒரு ஸ்கிரிப்ட்  ரெடி பண்ணி.ட்ரால் எல்லாம் பண்ணி வைச்சிருக்கன். அதில சார் சயனஸ்ரிட்டா இருப்பாரு .இத பாலா சயனஸ்மிட் ஸ்கிரீப்ட்  ரெடியா என்று கேட்பாங்க. இத  3 வருசமா  பயங்கரமா பாலோ  பண்றாங்க''. என சொல்லி சிரிச்சார்.

எனவே  இவரது ஆசை நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement