• Jul 25 2025

ஆன்லைன் காதல் இவ்வளவு அழகானதா.. ''செம ஃபீலா இருக்கே''... கோபிநாத்தே இம்ப்ரஸ் ஆன காதல்கதை!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி கடந்த 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான ஷோவாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை துவக்கம்முதலே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சி இவருக்கு சர்வதேச அளவில் விருதுகளை மட்டுமில்லாமல் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. இதுபோல ஒரே நிகழ்ச்சியை இத்தனை ஆண்டுகாலம் தொகுத்து வழங்கிவரும் ஆங்கர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் சென்சேஷனலான டாப்பிக்குகளை எடுத்துக் கொண்டு, அதன் இருபக்கங்களையும் ஆராயும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி காணப்படுகிறது. இருபக்கத்தின் நியாயங்களும் இந்த நிகழ்ச்சியில் பேசப்படும். 

இந்நிலையில் இந்த வாரமும் மிகவும் சென்சேஷனலான தலைப்புடனேயே களமிறங்கியுள்ளது நீயா நானா டீம். ஆன்லைன் காதல் மிகவும் அழகானது மற்றும் ஆன்லைன் காதல் சரிவராது என்பதாக இந்த வார தலைப்பு காணப்படுகிறது. இதில் ஆன்லைனிலேயே இலங்கை பெண்ணிடம் ப்ரெண்ட் ரெக்கொவஸ்ட் கொடுத்ததாக ஒருவர் கூற, அவர் பேசியது எல்லாம் உண்மையாக இருந்ததாகவும் திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் முதலில் இல்லை என்றும் அவரை காதலித்து திருமணம் செய்த பெண் தெரிவித்தார்.

இவ்வாறு நாளை ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த விவாதம் மிகவும் ரொமாண்டிக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பலர் தங்களது ஆன்லைன் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே ஆன்லைனில் பார்த்து காதல் செய்த இவர்களின் உலகம் உண்மையானதாக இல்லை என்று எதிர்தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் காதலுக்கு எதிரிகள் இல்லை என்றும் ஆன்லைனில் காதலிப்பதைதான் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் காதலில் உண்மை இருப்பதில்லை என்றும் அதிகமான சதவிகிதத்தினர் போலியாகவே இருப்பதாகவும் எதிர்தரப்பினர் கூற, நேரில் அறிமுகமாகும் நபர்களும் இதேபோல நடந்துக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆன்லைன் காதலை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். மற்றொரு சாரார், நேரில் பழகும்போது ஒரு இனிமை கிடைப்பதாகவும் ஆன்லைனில் பழகும்போது இது மிஸ்ஸாகும் என்றும் கூற, கோபிநாத், இந்தக் கருத்தால் இம்ப்ரஸ் ஆகி, இது செம ஃபீலா இருக்கு என்று பாராட்டு தெரிவிப்பதாக மற்றொரு ப்ரமோ அமைந்துள்ளது.

Advertisement

Advertisement