• Jul 24 2025

எங்கள் மனைவி விவாகரத்து கேட்கின்றார்களா?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமி மகன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய காமெடி நடிகர் தான் மயில்சாமி விஜய், அஜித், ரஜினிகாந்த், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியவர். 

 கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி அன்று கோவிலில் விடிய விடிய பிரார்த்தனை செய்துவிட்டு வீட்டிற்கு சென்ற இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மயில்சாமியின் மறைவு தற்போது வரை பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.


மயில்சாமி உயிரிழந்து சில மாதங்களே ஆகும் நிலையில்  மயில்சாமியின் மருமகள்கள் இருவருமே விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இருந்தே இரண்டு மருமகள்களும் மாமியாருடன் சண்டை போட்டு வந்ததாகவும், மயில்சாமி இருந்தவரை பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக்கொண்ட நிலையில், அவர் இறந்த பின்னர் பிரச்சனை முற்றி இரண்டு மருமகள்களும் தங்களின் கணவன் மார்களிடமும் சண்டை போட்டுகொண்டு தற்போது விவாகரத்து கேட்டு  நீதிமன்றம் வரை சென்றதாக கூறப்பட்டது .


ஆனால் இந்த தகவல் குறித்து, மயில்சாமி மகன்களிடம் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், பிரபல ஊடகம் ஒன்று... மயில்சாமியின் மூத்த மகன் அன்புவை தொடர்பு கொண்டு, இந்த விவாகரத்து சமாச்சாரம் குறித்துபேசியபோது, இது முழுக்க முழுக்க வதந்தி என்பதை உறுதிசெய்துள்ளார். மேலும் இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை யார் தான் இப்படி பைத்தியக்கார தனமாகவும், கீழ்த்தனமாகவும் செய்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை? என கூறி, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Advertisement

Advertisement