• Sep 10 2025

பாக்கியா மறுமணம் செய்து கொள்கிறாரா..? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்... அடித்துக் கூறும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பெங்காலி மொழியில் வெளியான ஸ்ரீமோயி என்ற தொடரின் உடைய ரீமேக் ஆகும். இந்த சீரியல் தான் டிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றது.

மேலும் இந்த சீரியலானது சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்களை பற்றிப் பேசுகின்றது. அந்த வகையில் பாக்கியாவின் கணவர் கோபிக்கு பாக்கியாவிடம் பழனிச்சாமி நெருங்கிப் பழகுவது சுத்தமாகவே பிடிக்கவில்லை. இதனால் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றார்.


இந்நிலையில் இறுதியாக வெளிவந்த பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வீடியோவின் பிரகாரம் பழனிச்சாமியின் அம்மா பாக்கியா வீட்டிற்கு சென்று பாக்கியாவை பெண் கேட்கும் முடிவில் இருக்கின்றார். ஆனால் இதில் பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.

இதனையடுத்து அடுத்தவாரம் இந்த சீரியலில் என்ன நடக்க போகிறது என்பதனை ரசிகர்கள் இப்போதே கணித்து விட்டனர். அந்தவகையில் அடுத்தவாரம் முழுவதும் பாக்கியாவின் மறுமணம் குறித்த காட்சிகள் தான் கண்டிப்பாக ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் அடித்துக் கூறி வருகின்றனர்.


எனவே பாக்கியா பழனிசாமியை மறுமணம் செய்வாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement

Advertisement