• Jul 26 2025

பாக்கியலட்சுமி கோபியின் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டமா..? அவரே கூறிய விடயம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இதில் பாக்கியாவின் கணவராக கோபி எனும் கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் தான் சதிஷ்.

இந்த தொடரில் நெகடிவ் ரோலில் நடிப்பதால் இவருக்கு பல விமர்சனங்கள் வந்து சேருகின்றது.

மேலும் அந்த சீரியல் பார்ப்பவர்கள் நிச்சயம் கோபியை தினமும் திட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு மோசமான கதாபாத்திரம்.

நான் நடிகன், அது நடிப்பு மட்டும்தான் என சதீஷ் பல முறை விளக்கம் கொடுத்தாலும், நிஜத்திலும் அவரை பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் வெறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரம் பற்றி பேசி இருக்கிறார்.

5 வயதில் தம்பியை இழந்து, விபத்தில் பெற்றோரை இழந்து.. ஒரு அனாதையாக சென்னைக்கு வந்தேன். இரண்டு சட்டை, இரண்டு அரை trouser மட்டும் தான் வைத்திருந்தேன். என் அத்தை வீட்டில் தான் வாழ்ந்தேன், வளர்த்தேன்.

எனக்கு தமிழ் பேச சொல்லி கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, இப்போது வருமானம் கொடுத்து, பெயர் புகழ் கொடுத்து, இன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான்.

மேலும் தமிழ் ஒரு மொழி மட்டுமில்லை.. அது கலாச்சாரம், அது ஒரு மதம், அது ஒரு சக்தி. வாழ்க தமிழ் என சதீஷ் கூறி இருக்கிறார்.அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement