• Jul 24 2025

பிரபு தேவா தனது குழந்தைக்கு முன்னாள் காதலியின் பெயரை வைத்திருக்கின்றாரா?- நீங்க இன்னும் மறக்கலையா சேர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னந்திய சினிமாவில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவuாக விளங்குபவர் தான் பிரபுதேவா.இவர்  1995ம் ஆண்டு ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். 

இதில் முதல் மகன் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தின் மீது விரக்தியில் இருந்த பிரபு தேவா நயன்தாரவை காதலித்து வந்தார். இருவரும் லிவ்விங் டூ ரிலேஷன் ரிப்பில் இருந்தனர். இது பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், பிரபு தேவா ரமலத்தை விவாகரத்து செய்து விட்டு பிரிந்தார்.


இதன் பின் நயன்தாராவை பிரபு தேவா திருமணம் செய்து கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.இதையடுத்து, 2020ம் ஆண்டு பிரபுதேவா பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பிரபுதேவா முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த போது, அவருக்கு ஹிமானி சிங் தான் சிகிச்சை அளித்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து பெண் வீட்டினர் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் நடைபெற்றது.


இந்நிலையில், பிரபுதேவாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தனது பெண் குழந்தைக்கு நயன்தாரா என பெயர் வைத்துள்ளாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட இணையவாசிகள் இது தான் காதலுக்கு மரியாதை கொடுப்பதா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 ஆனால், சிலர் இதற்கு வாய்ப்பே இல்லை என்றும், யாரோ சிலர் கொளுத்தி போட்ட வதந்தி என்று பிரபு தேவாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement