• Jul 26 2025

கதிரவனை காதலிக்கிறாரா குயின்சி..பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து இப்போது வெற்றிகரமாக 6வது சீசன் வரை நடைபெற்று கொண்டு இருக்கின்றது பிக்பாஸ் வீடு. இந்த 6வது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

இந்த வாரம் வேறு டபுள் எவிக்ஷன் என்று கூறப்படுகிறது, இதில் யார் வெளியேறுவார்கள் என யோசித்து வருகிறார்கள். Danger Zoneல் ஆயிஷா, ராம் மற்றும் ADK என 3 பேர் கடைசியில் உள்ளார்கள்.

எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியை போல இந்த சீசனிலும் காதல் கதை வருமா என்று பார்த்தால் இப்போது வரை இல்லை. ஆனால் குயின்சி கதிரவனை காதலிப்பதாக ஒரு பேச்சு  பிக்பாஸ் வீட்டுக்குள் அடிபட்டது, ஆனால் எதுவும் உறுதியாக தெரியவில்லை.


பிக்பாஸை விட்டு வெளியேறிய குயின்ஸி ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் கதிரவனுடனான காதல் குறித்து பேசியிருக்கிறார். சிவினுக்கு கதிரவன் மீது காதல் ஏற்பட்டது, அதை அவரே கூறியிருக்கிறார், ஆனால் கதிரவன் எதுவும் தெரியாத மாதிரி இருந்துவிட்டார்.

எனினும் இதன் பின்பு குயின்சி கதிரவனை காதலிக்கிறார் என கூறப்பட, சிவினை வெறுப்பேற்றவே நாங்கள் அப்படி Prank செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement