• Jul 23 2025

படுத்து விட்டதா ரஜினியின் ஜெயிலர் - 10 நாட்களில் வசூல் இவ்வளவு தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் கடந்த வாரம் வெளியானது.இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது.


நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்த, தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.


தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகள் என எங்கெல்லாம் வெளிவந்ததோ, அந்த இடங்களில் எல்லாம் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்த 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ஜெயிலர் ரூ. 460 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது.


இதன்மூலம் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் செய்த வசூல் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement