• Jul 24 2025

SK 21ல் சாய் பல்லவியின் சம்பளம் இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் SK21 படத்தின் பூஜை இன்று கோலகலமாக போடப்பட்ட நிலையில், அதன் வீடியோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி நிறைய படங்களை தேர்வு செய்து நடிக்காமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் மிகச் சிறந்த படமாக பலராலும் பாராட்டப் பெற்றது.

விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்க வாய்ப்புகளை கால்ஷீட் காரணமாக தவிர்த்து விட்டார் என்கிற பேச்சுக்களும் சமீபத்தில் அடிபட்டன.ஆரம்பத்தில், ஹன்சிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சிவகார்த்திகேயன் அதன் பிறகு பிரியங்கா மோகன், அதிதி ஷங்கர் என இளம் நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.

எளிமையாக சுடிதார் அணிந்துக் கொண்டு நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் உடன் எஸ்கே 21 படத்தின் பூஜையில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சிவகார்த்திகேயன் அருகே அமர்ந்து கொண்டு தேர்வு எழுதுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், சாய் பல்லவியின் அழகை பார்த்த அவரது ரசிகர்கள் சாய் பல்லவியின் ஸ்டில்களையும் சாய் பல்லவியின் வீடியோக்களையு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி எஸ்கே 21 படத்தில் நடிக்க ஓகே சொன்ன நிலையில், இந்த படத்தில் அவருக்கு 2.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement