• Jul 25 2025

சினேகா விவாகரத்து உண்மையா?- இதுவரை வெளிவராத ரகசியத்தை கூறிய பயில்வான் ரங்கநாதன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவுலகில் முன்னணி நடிகையாக சினேகா. ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, புதுப்பேட்டை, வசீகரா உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடித்திருக்கின்றார்.

விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவரை ரசிகர்கள் புன்னனை அரசி என்று அழைப்பதும் உண்டு. தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தும் வருகின்றார்.

மேலும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்ததோடு கடந்த 2011ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு விகான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.


சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவிய வரும் நிலையில், இந்த செய்தி குறித்து சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக பரவி வரும் செய்தியில் துளி கூட உண்மை இல்லை என்றார்.

இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக பிரபல தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை அடுத்தே இந்த விவகாரம் பூதாகரமானது. அந்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம் சினேகாவிடம் ஒரு இன்டர்வியூ கேட்டதாகவும், பொங்கலுக்கு ஒரு நிகழ்ச்சியை தயாரித்து தரும்படி கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக சினேகா சம்பளம் கேட்டுள்ளார். தொலைக்காட்சி நிர்வாகம் சம்பளத்தை குறைத்துக்கொள்ளும்படி பலமுறை கேட்டுள்ளனர். இதற்கு சினேகா சம்மதிக்காததால், சினேகா மீது இருந்த கடுப்பால் அந்த சேனல் விவாகரத்து வதந்தியை பரப்பி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


ஒரு தனிப்பட்ட சுயநல காரணத்திற்காக சினேகா மீது அவதூறு பரப்பலாமா என சினேகாவின் ரசிகர்கள் பிரபல தொலைக்காட்சி மீது வெறுப்பில் இருக்கிறார்கள் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Advertisement

Advertisement