• Jul 23 2025

‘அரண்மனை 4’ படத்திலிருந்து விலகுகிறாரா.. விஜய் சேதுபதி.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுந்தர் சி ‘காபி வித் காதல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 4-பாகத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே அரண்மனை 1,2,3, ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதனுடைய தொடர்ச்சியாக சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்க இறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் , இந்த 4-வது பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் என்றும் படத்தில் இவர்கள் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டது எனவும் கூறப்பட்டது.

ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை 4’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதாக தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் கசிந்துள்ளது.

விஜய் சேதுபதி தற்போது தனது ஷூட்டிங் ஷெட்யூலில் பிஸியாக இருப்பதாகவும், இதனால் 2023 ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டிருந்த ‘அரண்மனை 4’ படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாது என்றும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில், விஜய் சேதுபதி இந்த திகில் படத்தில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் நடிகர் நடிக்க மாட்டார்  என்ற செய்தி அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.


Advertisement

Advertisement