• Jul 25 2025

ஷு தமிழில் ஒளிபரப்பாகும்'சீதா ராமன்' சீரியலில் இனி சீதாவாக நடிக்கப் போவது இவர் தானா?- அடடே இவரும் சூப்பர் நடிகையாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவி தொலைக்காட்சியில், சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் கடந்த அண்டு முடிவடைந்தது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து  ஷு தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட 'சீதா ராமன்' தொடரில் நடித்து வருகின்றார்.

பிரியங்கா நல்காரிக்கு ஏற்கனவே அவருடைய காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணம் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பிரியங்கா நல்காரி மற்றும் அவரின் காதலர் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை இருவருமே பேசி சமரசம் செய்து கொண்டு, ஒருவழியாக கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர், மலேசியாவில் உள்ள கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.


இந்த திருமணத்தில் பிரியங்கா நல்காரி குடும்பத்தின்ருக்கு சம்மதம் இருந்தாலும், அவரின் காதலர் குடும்பத்தில் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என தெரிவித்திருந்தார். விரைவில் தன்னுடைய குடும்பத்தினர் மனம் மாறிவிடுவார்கள் என்பதை தெரிவித்ததோடு, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என பிரியங்கா கூறிய நிலையில், சமீபத்தில் தன்னுடைய கணவருக்கு நான் நடிப்பதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் விரைவில்  'சீதா ராமம்' தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும், தன்னுடைய குடும்பத்திற்காக இவர் சீரியலை விட்டு விலகுவதால் தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்தனர். மேலும் தற்போது 'சீதா ராமன்' தொடர் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இந்த சீரியலில்பிரியங்கா நல்காரி நடித்து வரும் கதாபாத்திரத்தில், விஜய் டிவி சீரியலில் 'செந்தூரப்பூவே' சீரியலில் நடித்து பிரபலமான ஸ்ரீநிதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


சீதா ராமன் சீரியலில், ஹீரோவாக ஜே டிசோசா என்பவர் நடித்து வருகிறார். பாக்கிய லட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி மஹாலக்ஷ்மி என்கிற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் . ஸ்ரீநிதி தான் அடுத்த சீதாவாக நடிக்கப் போகின்றாரா என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement