• Jul 23 2025

விடுதலை 2 படத்தில் சூரி ஹீரோ இல்லையா- செம டுவிஸ்டை வைத்த வெற்றிமாறன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் விடுதலை. இந்த படம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக உருவாகிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக நான்கு வருட காத்திருப்பு முடிந்து படம் ரிலீஸ் ஆகப்போகிறது. ரசிகர்களுக்கும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

விடுதலை படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலை சார்ந்த காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இரண்டாம் பாகத்தையும் கிட்டத்தட்ட முடித்து விட்டாராம். எனவே அந்த பாகத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.


இந்தப் படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இதற்காக சூரி ரொம்பவே கடினமாக உழைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய கடின உழைப்பு திரையில் பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது. இசைஞானி இளையராஜா படத்தைப் பார்த்துவிட்டு சூரியின் நடிப்பை வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் மிகப்பெரிய டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதாவது இரண்டாவது பாகத்தில் சூரி ஹீரோவாக வரமாட்டாராம். இரண்டாம் பாகத்தின் மொத்த கதையும் விஜய் சேதுபதியை மையமாக வைத்து தான் நகர இருக்கிறது.


கதைப்படி விடுதலை இரண்டாம் பாகத்தில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தானாம் . மேலும் இரண்டாம் பாகத்தின் சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகள் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ்ஸில் வர இருக்கிறதாம். கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குநர் வெற்றிமாறன் இரண்டாம் பாகத்திற்கான பயங்கரமான ட்விஸ்ட்டை சேர்த்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே வெற்றிமாறன், இளையராஜா, சூரி, ஏ சர்டிபிகேட் என படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருந்த நேரத்தில் தற்போது வந்திருக்கும் இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது என்று சொல்லலாம்.


Advertisement

Advertisement