• Jul 25 2025

அஜித்தின் எ.கே 62 படத்திற்கு நடிகை ரெடி... கடைசில இவர்தான் நடிக்கப்போறாரா..?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் ஏகே 62 படத்திற்கு முதன் முதலாக பிரச்சனை கிளம்பியதே ஹீரோயின் குழப்பத்தில் தான் என்கின்றனர். இந்நிலையில், அந்த குழப்பம் இன்னமும் தீரவில்லை என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


முதலில் நடிகை நயன்தாராவால் தான் அஜித் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு லைகா நிறுவனத்துக்கு சென்றது. 105 கோடி ரூபாய் சம்பளத்தை அஜித்துக்கு லைகா வழங்குவதற்கு காரணமே நயன்தாரா தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. கடைசியில் நயன்தாராவின் தலையீடு அதிகமானதால் தான் விக்னேஷ் சிவனை  படத்தில் இருந்து நீக்குவதற்கு காரணம் என்றும் சர்ச்சைகள்கிளம்பின.


விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்த அஜித் நயன்தாரா மட்டும் ஹீரோயினாக வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாராம். திருமணத்திற்கு பிறகு நயன்தாராவுடன் அவரது கணவருக்கு முன்பாகவே டூயட் பாடினால் நல்லா இருக்காது என்பதால் நயன்தாரா வேண்டவே வேண்டாம் என சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


நயன்தாராவுக்கு பதில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராயை முடிவு செய்து, பின்னர் கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. கடைசியாக சாய் பல்லவி வரை பல பெயர்கள் அடிபட்டும் இறுதியில்  ஃபிக்ஸ் செய்ய முடியாத நிலையில் தான் இயக்குநரை மாற்ற வேண்டிய சூழலே உருவானது என்றும் தகவல்கள் வெளியாகின.


விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து வெளியேறியதும், ஏற்கனவே மகிழ் திருமேனி அஜித்துக்கு ஒரு கதை சொல்லி இருந்த நிலையில், அதனை மீண்டும் லைகா மற்றும் அஜித் கேட்டு, இந்த படத்தில் மகிழ் திருமேனியையே இயக்குநராக போட்டு விடுங்கள் என அஜித் சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.


புதிய தகவலாக கடைசியில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலை அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் ஒப்பந்தம் செய்யலாமா? என்கிற ஜோசனையை லைகா தரப்பு வைத்துள்ளதாக கூறுகின்றனர். 


ஏற்கனவே அஜித் உடன் இணைந்து விவேகம் படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். எனவே அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். மார்ச் 9ம் தேதி ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட லைகா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 









Advertisement

Advertisement