• Jul 24 2025

நடிகை ஆலியா பட் வாங்கிய பிரம்மாண்ட அப்பார்ட்மென்டின் மதிப்பு இத்தனை கோடியா?- அதுவும் யாருக்கு கொடுக்கப் போகிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன கங்குபாய் கத்தியவாடி, ஆர்.ஆர்.ஆர், பிரம்மாஸ்திரா ஆகிய மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. குறிப்பாக ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் வரை சென்று சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்று சாதித்தது.


 அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்துகொண்டார் ஆலியா. இந்த ஜோடிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஹா என பெயரிட்டுள்ளனர் ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி.இந்நிலையில், நடிகை ஆலியா பட் மும்பையில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கி உள்ளார். 


 இந்த அடுக்குமாடி குடியிருப்பின் விலை ரூ.37.80 கோடியாம். நடிகை ஆலியா பட் வாங்கியுள்ள இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு 2 ஆயிரத்து 497 சதுர அடி கொண்டதாம். மும்பையின் பந்திரா அருகே உள்ள பாலி ஹில் பகுதியில் தான் இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்து உள்ளதாம். இந்த அடுக்குமாடி குடியிருப்பை தனது தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் என்கிற நிறுவனத்தின் பெயரில் தான் வாங்கி உள்ளாராம் ஆலியா பட். 


இதுதவிர அவர் தனது தங்கை ஷாஹீன் பட்டிற்கு பரிசாக கொடுப்பதற்காக மும்பை ஜூஹூ பகுதியில் 2 அப்பார்ட்மெண்ட்களையும் விலைக்கு வாங்கி உள்ளாராம். அதன் மதிப்பு ரூ.7.68 கோடி இருக்குமாம். இந்த இரண்டு அப்பார்ட்மெண்ட்டுகளும் 2 ஆயிரத்து 86 சதுரடி கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி நடிகை ஆலியா பட் ஒரே நேரத்தில் சுமார் 50 கோடி செலவழித்து அப்பார்ட்மெண்ட்டுகளை வாங்கியுள்ளது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement