• Jul 25 2025

பிக்பாஸ் வைல்டு கார்டு எண்ட்ரியாக... ஆபாச பட நடிகை களமிறங்குகின்றாரா..? இதோ அவரே கூறிய ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவில் மக்கள் மத்தியில் ரொம்பவே பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. 

இருப்பினும் இந்தியாவில் முதன்முதலில் இந்தியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதுமட்டுமல்லாது தற்போது 16-ஆவது சீசன் நடைபெற்று வருகிறது.


மேலும் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஆபாச பட நடிகையான மியா கலீஃபா வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக ஒரு செய்தி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. 


அத்தோடு ஏற்கனவே ஆபாச பட நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் கலக்கி வரும் நிலையில், மியா கலீஃபா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால், அவரும் சன்னி லியோனுக்கு டஃப் கொடுப்பார் என்றெல்லாம் பாலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் தாறுமாறாக அடிபடத்தொடங்கியது.


இதனைத் தொடர்ந்து மியா கலீஃபா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக பரவிய தகவல் வெறும் வதந்தி என்று இப்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் கூற வேண்டுமாயின் மியா கலீஃபா பற்றி இதுபோன்ற வதந்திகள் பரவுவது புதிதல்ல. ஏ

ற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தது. 


இதனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மியா, தான் ஒருபோதும் இந்தியாவுக்கு வரமாட்டேன் என டுவிட் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement