• Jul 25 2025

விக்ரம் படம் இந்த வெப் சீரியலின் காப்பியா?- அடடே அப்படியே எடுத்திருக்கின்றாரே- விளாசி வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது விஜய் நடித்து வரும் லியோ படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தில் விஜய் தன்னுடைய காட்சிகள் முழுவதையும் அண்மையில் தான் நடித்து முடித்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ரஜினியை வைக்க இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.லியோ படத்திற்கு முன் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் விக்ரம். உலகநாயகன் கமல் ஹாசனுக்கு பல வருடங்களுக்கு பின் மாபெரும் வெற்றியை விக்ரம் தான் தேடி கொடுத்தது.


இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் LCU எனும் கான்சப்ட்டை கொண்டு வந்து அனைவரையும் அசரவைத்தார். அதுமட்டுமின்றி கேமியோ ரோலில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றி திரையரங்கையே அதிர வைத்தார் சூர்யா.

இப்படி பல கூஸ்பெம்ப்ஸ் ஏற்படும் விஷயங்கள் கூட மிரட்டிய லோகேஷ் விக்ரம் படத்தை பிரபல வெப் தொடர் ஒன்றில் இருந்து காப்பியடித்து தான் எடுத்துள்ளார் என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.விக்ரம் படத்தில் எப்படி தனது மகன் நேர்மையாக இருந்ததற்காக வில்லன்களால் கொல்லப்பட்டு, அதற்காக தந்தை கமல் பழிவாங்கி, தனது பேரனையும் காப்பாற்றுவாரோ. அதே போல் தான் கடந்த 2015ஆம் ஆண்டு Better Call Saul எனும் ஆங்கில வெப் தொடரிலும் கதைக்களம் அமைத்திருக்கும்.


இதை கவனித்த நெட்டிசன்கள் சிலர். விக்ரம் திரைப்படத்தை Better Call Saul வெப் தொடரில் இருந்து தான் லோகேஷ் காப்பியடித்து எடுத்துள்ளார் என கூறி வருகிறார்கள்.மேலும் அட்லியை விட நீங்க பெரிய கில்லாடி போல இருக்கே எனக கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement