• Jul 25 2025

அந்த நடிகைக்கும் எனக்கும் கனெக்சன் இருக்கா.. பயில்வானை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பத்திரிகையாளராகவும் யூடியூப் பிரபலமாகவும் வலம் வருபவர் தான் பயில்வான் ரங்க நாதன். இவர் பல நடிகர் நடிகைகளைத் தவறாகப் பேசி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். 

சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இவரை  கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அப்படி தயாரிப்பாளர் கே ராஜன் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் பயில்வானை பற்றி கடுமையாக தாக்கி பேசி வருகிறார். 

மேலும் அப்படி சமீபத்தில் நடந்த என்னை மாற்றும் காதலே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார் கே ராஜன்.

பண்ணையாரும் பதிமினியும் படத்தில் நடித்த நடிகை துளசி பக்கத்தில் கே ராஜன் உட்கார்ந்திருந்தார். அதன்பின் மேடையில் பேசிய கே ராஜன், நாம் இருவரும் அருகில் உட்கார்ந்திருப்பதை கூட சிலர் சேர்த்து வைத்து பேசுவார்கள் என்றும் இருவருக்கும் கனெக்ஷன் இருப்பதாகவும் சித்தரிப்பார்கள் என்று கே ராஜன் துளசியை பார்த்து கூறினார்.

உடனே எழுந்து போன துளசியிடம், இதையும் ராஜனுடன் ஓடிவிட்டார் என்று சில பயில்வார்(வான்)கள் எழுதுவார்கள் என்று பயில்வானை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.


மேலும் பெண்களை வைத்து கேவலமாக விமர்சனமும் செய்வார்கள் என்று வெளுத்து வாங்கினார். அத்தோடு நான் பேசியதை உடனே இந்நேரம் வீடியோவை தயார் செய்திருப்பார் என்றும் அந்த வீடியோ கூடிய விரைவில் வெளியாகலாம் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement