• Jul 23 2025

நிர்வாகிகளை சந்திக்க பழைய காரில் வந்த விஜய்... இதற்குப் பின்னால் இப்படி ஒரு ரகசியமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து நேற்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் நடிகர் விஜய் புறப்பட்டு பனையூர் நோக்கி சென்றார். இவ்வாறாக பனையூர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


அந்தவகையில் இந்த கூட்டம் அரசியல் குறித்து பேசுவதற்காக என்றும் செய்திகள் வெளியாகின. மேலும் இவர் வந்த கார் நெளிந்து பழைய காராக இருந்ததால், ஏன் இந்த காரில் வந்தார் என்று பரபரப்பாக மக்களிடையே கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஏழு ஆண்டுகள் பழமையான காராக இருந்தாலும் இது விஜய்யின் அதிர்ஷ்ட கார் எனக் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement