• Jul 25 2025

கைதி படத்திற்கும் தளபதி 67 படத்திற்கும் இப்படியொரு ஒற்றுமை இருக்கின்றதா?- Trend செய்யும் ரசிகர்கள்!!

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்,,யக்கி வருகின்றார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது  கடந்த ஜனவரி 2 ஆம் தேதி ஆரம்பமாகியது.

இசை அமைப்பாளர் அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்


இதனிடையே, தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்டோர் நடித்து வருவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.அதே போல, நடிகை த்ரிஷாவும் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு, இணைந்து நடிக்க உள்ளார்.

 இதனிடையே, தளபதி 67 படத்தின் பூஜை நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இதில், நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் S.லலித்குமார், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி, அர்ஜுன், த்ரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி, பிரபல இயக்குனர்கள் கார்த்தி சுப்புராஜ், புஷ்கர், ரவிக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.


அதன்படி, தளபதி 67 படத்தின் டைட்டில் நாளை (03.02.2023) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கைதி மற்றும் தளபதி 67 படத்தின் போஸ்டர்கள் இரண்டையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் நிறைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். கைதி படத்தின் போஸ்டர் ஒன்றில், கார்த்தி முகம் ரத்தத்தின் மூலம் இருக்க, மேலிருந்து கீழ் வரை ரத்தம் வழிவது போன்றும் போஸ்டர் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டில் Announcement போஸ்டரும் முழுக்க முழுக்க ரத்தத்தை அடிப்படையாக கொண்டு விஜய்யின் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டு படங்கள் நடுவே, இருக்கும் போஸ்டர் ஒற்றுமைகள் பற்றி பலரும் பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.





Advertisement

Advertisement