• Jul 25 2025

விபத்தில் சிக்கியதால் செயலிழந்த கால்... நடிகர் அரவிந்த்சாமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

90 களில் தமிழ் சினிமாவில் பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் - மம்மூட்டி நடிப்பில் வெளியான 'தளபதி' படத்தின் மூலமாக தமிழில் கால் பதித்தார். 


இதனையடுத்து பல படங்களிலும் நடித்து வந்த இவர் ஜெயம் ரவி படத்தில் வெளியான 'தனி ஒருவன்' படத்தின் மூலம் மென்மேலும் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தார். சினிமாவில் மட்டுமன்றி சொந்த தொழிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் டேலண்ட் மேக்ஸிமஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் தீவிரம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் துரதிஷ்டவசமாக அரவிந்த்சாமி கடந்த 2005-ஆம் ஆண்டு பெரும் விபத்து ஒன்றில் சிக்கினார். அந்த விபத்தின் பொது அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ஒரு கால் செயல்படாமல் இருந்துள்ளது.


இதனையடுத்து குறிப்பாக 4, 5 ஆண்டுகள் தொடர்ந்து அதற்காக சிகிச்சை எடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போதும் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து கலக்கி வருகின்றார்.

Advertisement

Advertisement