• Jul 26 2025

தனது சோக வாழ்க்கையை தானே கூறிய செங்கல் சைக்கோ... இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா..?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

செங்கல் சைக்கோ தனது சோகமான இன்னொரு முகத்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அவர் கூறுகையில், நான் தெம்புக்கு தான் சாப்பிடுவேன், ருசிக்காக சாப்பிடுவதில்லை. ஏனென்றால் எனக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். ஒரு நாளில் ஒரு தடவை மட்டும் தான் சாப்பிடுவேன். நிறைய ஆடிசன் போனேன், அனால் இப்போ ஆடிசனே ஏமாத்து வேலை போல் தெரிகிறது.


1000 ஆடிசன் போயிருப்பேன் ஒன்று கூட கிடைக்கவில்லை. விக்ரம் படத்திற்கு குடிகாரன் கெட்டப் ஆடிசன் பண்ணினேன், ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை ஒரு தகவலும் தரவில்லை. யோகிபாபு என்னுடைய நெருங்கிய நண்பன் தான்.


ஆனால் அவன் சொல்வான், நான் சொல்லி நீ பண்ணக்கூடாது உன்னுடைய முயற்சியில் பண்ணனும் என்று. நான் சினிமாவில் வெற்றி பெற்ற பின்னர் கல்யாணம் பண்ணலாம் என்று இருந்தேன். எனக்கு ஒரு லவ் இருந்தது, அந்த பொண்ணு ஒரு டாக்டர், அழகான பொண்ணு.


நாங்க சேர்ந்து வெளியில் போனால் எல்லோரும் கிண்டல் அடிப்பார்கள். பொண்ணு கூட ஒரு குரங்கு போகுது என்று, ஆனால் அதை அந்த பொண்ணு பெருசாவே எடுத்துக்க மாட்டாங்க. ஒரு சில காலத்திற்கு பிறகு நானே அந்த பொண்ண வேணாம் என்று சொல்லி விட்டேன்.


என்னுடைய அம்மா இறந்ததற்கு எல்லோரும் என்னைய தான் திட்டினாங்க, என்னால தான் இறந்தாங்க என்று. எனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும் என்று கவலை பட்டுத்தான் அம்மா இறந்தாங்க என்று சொந்தக்காரர்கள் எல்லோரும் என்னை திட்டினார்கள் என்று அவரின் சோக வாழ்க்கை பற்றி கூறினார்.


Advertisement

Advertisement