• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி ஜீவா வேடத்தில் நடிக்கப்போவது இந்த நடிகர் தானா..? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் அண்ணன் தம்பி ஒற்றுமையாக நகர்ந்து வரும் கதைக்களத்தில் மீனாவின் தங்கை திருமணம் மூலம் பிரிந்த குடும்பம் கதிர்-முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியால் இணையும் என தனம், கதிர் நினைத்தார்கள்.

ஆனால் வளைகாப்பு நிகழ்ச்சியால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை, அவரவர் முன்பு எடுத்த முடிவில் தெளிவாக உள்ளார்கள். எனினும் இப்போது கதைக்களத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.


கதையில் ஐஸ்வர்யா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கண்ணன் சில உதவிக்காக கதிரை தொடர்ப்பு கொள்ள ஒரு எமோஷ்னல் எபிசோட் வரும் என சொல்லப்படுகின்றது.

ராடர்ன் தயாரிப்பில் கிழக்கு வாசல் என்ற தொடர் தொடங்கப்பட்டது.அத்தோடு இதில் சில காட்சிகள் நடித்த சஞ்சீவ் தொடரை விட்டு விலக அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வெங்கட் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சில நாட்களாகவே செய்திகள் வருகின்றன.

இவ்வாறுஇருக்கையில் வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடர் புகழ் அருண் ஜீவாவாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.



Advertisement

Advertisement