• Jul 25 2025

நடிகர் சக்தியா இது- அவருடைய அப்பாவைப் போலவே இருக்கின்றாரே?- நடிகை குஷ்பு வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் தான் குஷ்பு. அந்த காலத்தில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, சரத்குமார், விஜயகாந்த், கமல், பிரபு என அனைத்து நடிகர்களுடனும் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

இயக்குநர் சுந்தர்.சியைத் திருமணம் முடித்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவருடைய சீனானது படத்தின் நீளம் காரணமாக குறைக்கப்பட்டது என்பதும் முக்கியமாகும்.


நடிப்பைத் தாண்டி இப்போது அரசியலில் இறங்கி கடுமையாக உழைத்து வருகிறார். எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகை குஷ்பு ஒரு அழகான புகைப்படத்துடன் பதிவு ஒன்று போட்டுள்ளார்.

அதில் அவர், நீங்கள் சிறுவயதில் பார்த்த ஒருவரை மீண்டும் நீண்டகாலம் கடந்து மீண்டும் சந்திக்கும் போது அவரை குழந்தையில் பார்த்தது போலவே இருக்கும்.அந்த வகையில் தான் சக்தி வாசுவை நான் பல காலம் கழித்து பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார். 


நடிகரும், பிக்பாஸ் பிரபலமும் ஆன சக்தியுடன் தற்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு குஷ்பு பதிவு போட்டிருக்கிறார். அதில் சக்தியை பார்த்த ரசிகர்கள் அட இவரா இது, தாடி மீசை, உடல் எடை போட்டு ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement