• Jul 24 2025

பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றி பெற்ற அந்நியன் படத்தில் முதலில் நடிக்க கமிட்டானது இந்த நடிகரா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

2005 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அந்நியன்.இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து சதா விவேக் நாசர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

 இயக்குநர் சங்கர் அவர்கள் இந்த படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கதை களத்தை வைத்து சண்டை காட்சிகள் மற்றும் கதை வசனங்கள் என அனைத்திலும் கலக்கி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.


பின் தனது அசத்தலான நடிப்பை இந்த படத்தில் வழி காட்டியிருக்கும் நடிகர் விக்ரமுக்கு அடுத்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்திற்காக அவருக்கு கொடுக்கப்பட்டது மேலும் தற்போது வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி கொண்டு வருகிறது.


அது என்ன தகவல் என்றால் அந்நியன் படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடிக்க இருந்தது விக்ரம் கிடையாதாம்.இப்படத்தில் நடிக்க இருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம்.மேலும் அப்போது நடிகர் ரஜினிக்கு கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படத்திலிருந்து ரஜினி விலகினாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement