• Jul 26 2025

பிக்பாஸ் சீசன் 7 இல் முதல் வைல்ட் காட் என்ட்ரியாக நுழையப்போவது இந்த நடிகை தானா?- செம டுவிஸ்டாக இருக்கே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் தொடங்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸின் 7வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. தினம் தினம் புது புது காரணங்களுக்காக சண்டை வாக்குவாதம் என விறுவிறுப்பாக செல்கிறது நிகழ்ச்சி.

இந்த முறை இரண்டு வீடுகள் என்பது கூடுதல் சிறப்பாகும். ஒவ்வொரு வாரமும் வீட்டு தலைவரை குறைவாக கவர்ந்த போட்டியாளர்களை இரண்டாவது வீடான ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அந்த வகையில், இந்த வாரம்தான் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸ் வீட்டிற்கு இடையிலான பிரிவு மோதலை ஏற்படுத்தி வருகிறது.


முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரைஎன இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இதனால் இந்த வாரம் யாரும் வீட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


 மேலும் பிக் பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வருவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பாக்கப்பட்டது.இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் VJ அர்ச்சனா வைல்ட் கார்ட் மூலம் விரைவில் என்ட்ரி ஆகப்போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.   


Advertisement

Advertisement