• Jul 23 2025

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அம்மா இவர் தானா?- இளம் ஹீரோயின் போல இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

 இவர் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், இந்தியில் அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.அமிதாப் பச்சன், விஜய், அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள ராஷ்மிகா அடுத்ததாக தனுஷுடன் D51 திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.


கடந்த 1996ஆம் ஆண்டு மதன் மந்தனா மற்றும் சுமன் மந்தனா ஜோடிக்கு பிறந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார்.இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரி இருக்கிறாங்களே என்று கூறி வருகின்றனர். அத்தோடு ராஷ்மிகா மந்தன விஜய்தேவர் கொண்டாவை காதலிப்பதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement